இனி தமிழ்நாட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரும் வேலூருக்கு போக முடியாது!: மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

இந்தியாவில் எதிர்பாராதவிதமாக கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மத்தியில் ஒமைக்ரான் பரவும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தக்க பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்றைய தினம் தமிழகத்தில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இனி வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். பேருந்து, ரயில் மற்றும் இதர வாகனங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment