Connect with us

யாரும் அதிலிருந்து தப்பிவிட முடியாது; அதில் நான் உஷாராக இருக்கிறேன்!!- முதல்வர்

stalin new16

Tamil Nadu

யாரும் அதிலிருந்து தப்பிவிட முடியாது; அதில் நான் உஷாராக இருக்கிறேன்!!- முதல்வர்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு வெளியிட்டால் அதனை நிச்சயமாக செய்து காட்டுவோம் அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என கூறியுள்ளார்.

ஒரு திட்டம் அறிவித்த பின்பு வாரந்தோறும் அந்தத் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை குறித்து கோட்டையில் இருந்து நாள்தோறும் அதனை கண்காணித்து வருவதாக முதல்வர் கூறினார்.பொருளாதாரத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் உயர் கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் பெறுவதில் சமூகத்தின் தடைகளை தாண்டி வளர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெண்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தொழில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் 6 கோடி செலவில் முதற்கட்டமாக மறாமத்து பணிகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 60% நிறைவேற்றியதாக கூறினார்.

மேலும், மீதியுள்ள வாக்குறுதிகளை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் 60 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top