தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும் இதுவரை பெரிய பாதிப்பு என்பது இல்லை.

இருப்பினும் கடந்த சில வாரங்களில் ஓமிக்ரான் தொற்று பாதிப்புடன் 179 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் உட்பட பலரும் கணக்கில் அடங்குவர். இந்த நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவந்த 179 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் எங்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment