ஒரு வாரத்திற்கு இரவுநேர முன்பதிவு நிறுத்தம்: இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

இன்று முதல் ஒரு வாரத்திற்கு இரவு நேர முன் முன்பதிவுகள் நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொரோனா கால சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விரைவில் அனைத்து ரயில்களும் இயக்க இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையில் சில சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு இரவு நேரங்களில் ரயில்வே முன்பதிவு, டிக்கெட் கேன்சல் உள்பட அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று முதல் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 05.30 மணி வரை சீரமைப்பு பணிகளை முன்னிட்டு உள்பட அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும் ரயில் பயணிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment