Connect with us

இரவு நேர ஊரடங்கும் கிடையாது! முழு நேர ஊரடங்கும் கிடையாது!! எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு?

இரவு நேர ஊரடங்கு

தமிழகம்

இரவு நேர ஊரடங்கும் கிடையாது! முழு நேர ஊரடங்கும் கிடையாது!! எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு?

இரவு நேர ஊரடங்கும் கிடையாது! முழு நேர ஊரடங்கும் கிடையாது!! எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு?

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருக்குமோ என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு இல்லை என்று ரத்து செய்யப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள்?

  1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
  2. அரசு, தனியார் கலை விழாக்கள் பொருட்காட்சிகள் நடத்த தடை தொடரும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
  3. உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  4. திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.
  5. துணிக் கடைகள், நகைக் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  6. கேளிக்கை விடுதிகளில் உள்ள யோகா பயிற்சி நிலையங்கள் 50% பேர் உடன் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  7.  அழகு நிலையங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
  8. நீர் விளையாட்டுக்களைத் தவிர்த்து 50 சதவீதம் பேர் உடன் பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் செயல் படலாம் என்றும் கூறியுள்ளது.
  9. உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயக்கலாம் என்றும் தமிழக அரசு.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top