Connect with us

மே 1ஆம் தேதி முதல் கட்டடம் கட்ட அனுமதி கோரி நேரில் வரத் தேவையில்லை…!

building

தமிழகம்

மே 1ஆம் தேதி முதல் கட்டடம் கட்ட அனுமதி கோரி நேரில் வரத் தேவையில்லை…!

மே 1ஆம் தேதி முதல் கட்டடம் கட்ட அனுமதி கோரி நேரில் வரத் தேவையில்லை…!

தற்போது அனைத்து  துறைகளும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கட்டடக்கலை அனுமதியும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து அனுமதி பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறவேண்டிய பொதுமக்கள் மே 1ஆம் தேதி முதல் நேரில் வரத்தேவையில்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தானியங்கி ஒற்றை சாளர அனுமதி முறைக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கட்டட அனுமதி கோரி விண்ணப்பித்து உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலேயே அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது. இதனால் மே 1-ஆம் தேதிக்குப் பின்னர் பொதுமக்கள் கட்டிடம் கட்ட அனுமதி கோரி இனி அலுவலகத்திற்கு வர அவசியம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.

மாநகராட்சி நகராட்சிகளில் பெருநகர குழுமம் நகர்ப்புற ஊராட்சி  இயக்ககம் மூலம் கட்டடம் கட்ட அனுமதி தரப்படுகிறது. கட்டட அனுமதி பெற பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதம் அலைச்சலைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top