தமிழகத்தில் இனி வாரத்திற்கு இரண்டு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மெகா தடுப்பூசி முகாம் வைத்து தொடர்ச்சியாக அதிக அளவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இவை ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் வைக்கப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்

ஆனால் ஐந்தாவது வாரம் முதல் தமிழகத்தில் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதிகளவிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏனென்றால் அசைவ பிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை மாற்றி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் அமைத்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.  இனி தமிழகத்தில் வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன்

அதன்படி தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் இரண்டு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமும் எட்டு லட்சம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் கொரோனா  தடுப்பூசி தொடர்ந்து போடப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் பொதுமக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment