ஒரே ஜாலிதான்; இனி வாரத்திற்கு 2.5 நாள் லீவு! வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை விடுமுறை!!

ஒவ்வொரு நாட்டிலும் பணியாளர்களுக்கு நலன் தரும் வகையில் நிறுவனங்கள் காணப்படும். நம் இந்தியாவிலும் இது போன்றுதான் உள்ளது. பல நாடுகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அல்லது ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும்.

நம் இந்தியாவிலும் அதனைப் போல் தான், ஒரு சில இடங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பணி என்ற கொள்கையும் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இனி வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை செய்தால் போதும் என்று ஐக்கிய அரபு நாடு அறிவித்துள்ளது.

ஏனென்றால் அந்த நாட்டில் பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு முஸ்லிம்களும் வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று மசூதிக்கு சென்று வழிபடுவர்.அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து மொத்தமாக வாரத்திற்கு 2.5 நாட்கள் விடுமுறை ஐக்கிய அமீரகம் அரபு நாடு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment