இனி டிராபிக் ஜாம்க்கு குட் பாய்..! அறிமுகமானது பிளையிங் கார்!!

நாளுக்கு நாள் அறிவியலின் அசுர வளர்ச்சியானது மேலோங்கியே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் புதுப்புது வாகனங்களின் வரத்து சந்தைகளில் நடந்து கொண்டுதான் வருகிறது.

இந்த நிலையில் தற்போது பறக்கும் கார் ஒன்று சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்துள்ளதாக தெரிகிறது, இதன்மூலம் சாலை நெரிச்சல் குறைய அதிக அளவு வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி துபாயில் அக்டோபர் 10ஆம் தேதி சோதனைப்படுத்தப்பட்ட இந்த பிளையிங் கார் வெற்றிகரமாக தரை இறங்கியது. மேலும் இதனை சீனாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான X-peng தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அடுத்த தலைமுறையின் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர் .மேலும் சீன நிறுவனமான எக்ஸ் பேங்க் இதற்கு 20 மில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இது முக்கியமான எலக்ட்ரிக்கல் வாகனங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர் இந்த ஃபிளையிங் கார் துபாயில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment