Connect with us

மொட்டை அடிக்க இனி காசு இல்லை: அமைச்சர் அறிவிப்பு

Tamil Nadu

மொட்டை அடிக்க இனி காசு இல்லை: அமைச்சர் அறிவிப்பு

9c05975c636dd95908f9077c01f3c28e-1

கோவில்களில் பக்தர்கள் மொட்டை அடிக்க இடம் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முடிகாணிக்கை செலுத்த இனி கட்டணம் இல்லை என்றும் அதே போல் கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் இல்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதற்கான கட்டணத்தை அந்த பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பழனி, திருச்செந்தூர் உள்பட பல கோவில்களில் மொட்டை அடிப்பதற்கு என பெரும் கட்டணம் வசூலிக்க பட்டு வரும் நிலையில் இனி பக்தர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலை துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்த அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top