Connect with us

இனி ராணுவத்தில் இலகு ரக பீரங்கிகள்-மத்திய அரசு நடவடிக்கை.!!

millitary scaled

செய்திகள்

இனி ராணுவத்தில் இலகு ரக பீரங்கிகள்-மத்திய அரசு நடவடிக்கை.!!

ஒவ்வொரு நாட்டிற்கும் அண்டை நாட்டுடன் பெரும் பிரச்சனையாக இருப்பது எல்லை பிரச்சினை தான். அதில் நம் இந்தியாவிற்கு சீனா எல்லை பிரச்சனையானது கடந்த சில நாட்களாக பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி கொண்டு வருகிறது.

குறிப்பாக லடாக் பகுதியில் சீன ராணுவம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மத்திய அரசு ராணுவத்தில் இலகு ரக பீரங்கிகளை இணைக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி லடாக் போன்ற மலைப்பிரதேச இலைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்திய ராணுவத்தில் இலகு ரக பீரங்கிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இது இந்தியா ராணுவத்திற்காக 350 இலகு ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலகு ரக பீரங்கிகளை  உருவாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். தனியார் நிறுவனமான லார்சன் அண்ட் டியூ ப்ரோ உடன் இணைந்து பீரங்கிகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலகு ரக பீரங்கிகளை தயாரிப்புக்கான பணிகள் முழுவதும் நடைபெற்று வருவதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டில் இலகு ரக பீரங்கிகள் தயாராக இருக்கும் என்றும் டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் வெட்டி அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top