காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் ஒவ்வொரு இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு காவல்துறையினர் மக்களுக்கு நண்பர்களாக செயல்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் காவல் துறையினர் மக்களைத் தாக்குவதும் நடைபெறும்.
சிலசமயம் போலீசாரை மர்மநபர்கள் தாக்குவதும், கொலை செய்வதும் அரங்கேற்றப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசாருக்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் ஏற்படலாம்.
அதனை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் ஒவ்வொரு காவலருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கும். இது நம் தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும். இதனை போன்று தற்போது புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்து செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஸ்வரன் கூறியுள்ளார். இரவு நேர ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக போலீசுக்கு துப்பாக்கியோடு எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று லோகேஸ்வரன் கூறியுள்ளார்.