நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். காலத்திற்கேற்ப விலைவாசியும் மாறிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய ரிசர்வ் வங்கி சில அதிரடி அறிவிப்புகளை கூறியுள்ளது.
அதன்படி ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இனி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளது. இவற்றை அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு மாதத்தில் இலவச பரிவர்த்தனை தாண்டி பணம் எடுக்கும் எடுக்கும்போது 20 ரூபாய் வசூலிக்கப்படும். இவை ஜனவரி 1-ஆம் தேதி முதல் இருபத்தி ஒரு ரூபாயாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதோடு மற்ற வங்கிகளில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுக்கும்போது ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூபாய் 25 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஏனென்றால் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வின் காரணமாக இத்தகைய அதிர்ச்சிகரமான முடிவை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.