Connect with us

இனி கூடுதல் லக்கேஜ்ஜுக்கு கட்டணம்;; மீறினால் 6 மடங்கு அபராதம் !!

chennai suburban trains EPS

தமிழகம்

இனி கூடுதல் லக்கேஜ்ஜுக்கு கட்டணம்;; மீறினால் 6 மடங்கு அபராதம் !!

இனி ரயிலில் கூடுதல் லக்கேஜ்ஜுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் இதனை மீறினால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதாக புதியகட்டுப்பாடுகளை அறிவித்துள்ள இந்திய ரயில்வே.

இந்நிலையில் புதிய விதிகளின் படி ஏசி முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ லக்ஜேஜ்களையும், ஏசி இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.

இதனையடுத்து  ஏசி 3 வகுப்பில் ஸ்லீப்பர் டயர்களில் பயணிப்பவர்கள் 40 கிலோ எடை மற்றும் 2-ம் வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ ஸ்லீப்பர்களில் லக்கேஜ்களை இலவசமாக பயணிக்கலாம்.

இந்த சூழலில் அனுமதிக்கப்பட்டுள்ள எடைக்கு மேல் பயணிகள் லக்கேஜ்களை எடுத்துச்செல்வது தெரியவந்தால் கூடுதலாக 6 மடங்கு அபராதமாக கட்டவேண்டியது இருக்கும் என இந்திய ரயில்வேதுறை எச்சரித்துள்ளது.

மேலும், லக்கேஜ்களுக்கான குறைந்தப்பட்ச கட்டணம் 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல விரும்புவோர் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல்  பயணிகள் டிக்கெட் முன்பதிவுவின் போதும் பயணிகள் கூடுதல் லக்கேஜ்க்கு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top