இனிமே பாலா இல்ல புஷ்பாடா! எப்படியோ ஒரு வழியா அவங்கள இம்ப்ரஸ் பண்ணிட்டாருப்பா!!
முன்பெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய அளவு காமெடி நிகழ்ச்சிகள் காணப்படாது. ஆனால் தற்போது காமெடி நிகழ்ச்சிகள் இல்லாத தொலைக்காட்சி இல்லை என்பது போல காமெடியின் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.
இவையெல்லாம் தாண்டி சமையல் நிகழ்ச்சி ஒன்றில் காமெடியை மையமாகக் கொண்டு நகர்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது தற்போது 3வது சீசன் எட்டி உள்ளது குறிப்பிடதக்கது.
அந்த நிகழ்ச்சி வேறு ஒன்றுமில்லை குக் வித் கோமாளி. கோமாளிகளின் தொல்லையில் சமையல் செய்வது தான் இந்த குக் வித் கோமாளி. கடந்த சீசனில் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. ஏனென்றால் கடந்த சீசன் முழுவதும் பாலா புகழின் அராஜகம் அதிகமாக காணப்பட்டது.குக் வித் கோமாளி சீசன் 3 நடைபெற்று வருகிறது இதில் பழைய கோமாளிகள் அதிகம் காணப் படுகிறார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் கோமாளி பாலா புஷ்பா பட ஹீரோ கெட்டப்பில் வந்தார். அவரை செலக்ட் பண்ணின சுருதிகா அர்ஜுன் முன்பு தீக்குச்சியைக் கொளுத்திப் இம்பிரஸ் செய்தார். இந்த ப்ரோமோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
