இனி தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு! நிலக்கரி வாங்குவதற்குக் கூட நிதி இல்லை!!
இலங்கையில் பெரும் பொருளாதார பற்றாக்குறை நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட தொடங்கி விட்டனர். இலங்கையில் இன்றும், நாளையும் டீசல் கிடையாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் இலங்கையில் இனி தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலக்கரி வாங்குவதற்குக் கூட நிதி இல்லாததால் மின் உற்பத்தி முடங்கி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தினசரி மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் வீடுகளுக்கு மின் இணைப்பைத் துண்டிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இலங்கையில் தொலைபேசி சேவை முடங்கும் அபாயம் காணப்படுகிறது.
