இன்று காலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை பார்வையிட சென்றிருந்தார். அவரோடு அமைச்சர் பெரியசாமி, சங்கராபரணி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட பின்னர் தற்போது நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் 30 ஆண்டு சராசரியை கணக்கிட்டு நீர்த்தேக்கம் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நவம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 139.05 அடி உயரம் வரை நீர் தேக்கி கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். 30 ஆண்டு சராசரி கணக்கின்படி நவம்பர் 30-ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பேபி டேம் கட்டுவதற்கு இடையூறாக விழுந்துகிடக்கும் மூன்று வாரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். 3 மரங்களை அகற்ற விடாமல் கேரளாவின் ஒரு துறை மற்றும் துறையை நோக்கி கை நீட்டி வருகிறது என்றும் கேரள அரசை விமர்சித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
பத்தாண்டு காலத்தில் எந்த ஒரு அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தது இல்லை என்றும் அவர் கூறினார்.