நாளைக்கு மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தான்!!

தமிழகத்தில் தற்போது வார வாரம் மெகா  கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதலில் இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. ஆனால் அசைவ பிரியர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில வாரங்களாக இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

தடுப்பூசி

இந்த நிலையில் நாளைய தினம் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இருக்கும் என்று நினைத்து நிலையில் நாளைய தினம் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏனென்றால் நேற்றைய தினம் தான் தீபாவளி பண்டிகை நிறைவு பெற்ற நிலையில் அடுத்த உடனே கொரோனா  தடுப்பூசி போட மக்கள் அனைவரும் தயங்குவர் என்றும் எண்ணி இந்த கொரோனா  தடுப்பூசி முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த எட்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 14ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வாரம் சனிக்கிழமை அல்ல ஞாயிற்றுக்கிழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று மெகா கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment