தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் நேற்றுடன் 200 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது
ஆனால் கடந்த திங்கள்கிழமை முதல் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் குறைந்துவிட்டது என்றும் ஒரு சில திரையரங்குகளில் கூட்டம் வராத காரணத்தினால் காட்சி ரத்து செய்யப்பட்டது என்றும் குறிப்பிடத்தக்கது
ரூபாய் 200 கோடி வசூல் என்பது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல் இல்லை என்றும் சமூக வலைதளங்கள் மட்டுமே தெரிவித்த தகவல் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை கூட்டம் சரியாக இல்லை என்றாலும் சனி ஞாயிறு விடுமுறை நாட்களிலாவது அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை காட்சியில் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே இந்த வாரம் மாஸ்டர் திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்படும் என்றும் வரும் வெள்ளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் படுகிறது