Connect with us

தமிழகத்தில் இன்று சுட்டெரித்த வெயில்!! உங்க ஊரில் எவ்வளவு வெயிலுன்னு பாக்கணுமா?

dry weather 1

செய்திகள்

தமிழகத்தில் இன்று சுட்டெரித்த வெயில்!! உங்க ஊரில் எவ்வளவு வெயிலுன்னு பாக்கணுமா?

தமிழகத்தில் இன்று சுட்டெரித்த வெயில்!! உங்க ஊரில் எவ்வளவு வெயிலுன்னு பாக்கணுமா?

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இந்த கோடை காலம் நிலவுவதால் தமிழகமெங்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக வட கிழக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முக்கியமான பல பகுதிகளில் இன்றைய தினம் பதிவான வெயிலின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேவேளையில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

ஊட்டியில் அதிகபட்சமாக வெறும் 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 14 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியதாக தெரிகிறது. கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் இருந்ததாகவும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கத்தில் அளவு இருந்ததாகவும் பதிவாகி உள்ளது.

கொடைக்கானலில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது அங்குள்ளோரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக வெறும் 16 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.

மதுரையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெயிலும் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரியில் 32 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக காணப்படுகிறது. குறைந்தபட்சமாக வெறும் 27 டிகிரி செல்சியஸ் வெயில் மட்டுமே பதிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top