தமிழகம்
திருமண நிதியுதவி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு
திருமண நிதி உதவி யார் யாருக்கு உண்டு, யார் யாருக்கு இல்லை என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
திருமண நிதி உதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிக்கும் நபரின் வீட்டில் யாரும் அரசு பணியில் இருக்க கூடாது. வேறு ஏதேனும் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்றிருத்தல் கூடாது
மாடி வீடு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தால் அது தள்ளுபடி செய்யப்படும்
மேற்கண்ட விதிமுறைகளின்படி தான் திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
