கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை! இனி கல்லூரிகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. மாணவர்கள் மத்தியிலும் இது பெரும் குழப்பத்தை உண்டாக்கி கொண்டே வருகிறது.

சுப்பிரமணியன்

இந்த நிலையில் இன்றைய தினம் காலையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மாணவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை கூறியிருந்தார். அதன்படி பள்ளிகளில் வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று கூறியிருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் கல்லூரிகளுக்கும் சில தடை விதிகளை கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன். அதன்படி கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்றும், வேறு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்றும் கல்லூரிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment