
தமிழகம்
இனி உணவு பார்சலுக்கு கூட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த தடை!!
பொதுவாக மக்காத குப்பையால் காணப்படுவது நெகிழி என்றழைக்கப்படுகின்ற பிளாஸ்டிக் குப்பைகள்தான். இவை மறுசுழற்சி செய்யப்படாமல் காணப்பட்டால் நிலத்தினை கொடுக்கும் தன்மையுடன் மாறிவிடும்.
இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில கடைகளில் முறையற்ற பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டால் கடையில் உரிமமும் ரத்து செய்யப்படுவதாக காணப்படுகிறது.
ஆயினும் கூட தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கவர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனி இந்த பிளாஸ்டிக் கவர்களும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து உணவகம் மற்றும் வணிக வளாகங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதனால் ஹோட்டல்களில் பார்சலுக்கு பதிலாக பாத்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
