இனி நான் இப்படித்தான் இருக்கப்போறேன் – சிம்பு அதிரடி முடிவு….!

எல்லாரோட வாழ்க்கையிலயும் மாற்றம் என்பது நிச்சயமாக இருக்கும். ஏனென்றால் மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த வகையில் நடிகர் சிம்பு தற்போது அவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம சிம்புவா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

simbu voe3

ஒரு சமயத்தில் சிம்பு பல நடிகைகளுடன் காதல் கிசு கிசுவில் சிக்கி வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சின்ன குஷ்பு ஹன்சிகா என டாப் நடிகைகளை காதலித்து பின்னர் அந்த காதல் முறிந்தது. இதனையடுத்து படங்களிலும் சரியாக கவனம் செலுத்தாமல் அவரது பட வாய்ப்புகளை அவரே கெடுத்து வந்தார்.

சிம்பு

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமலும், தாமதமாக வந்தும் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதற விட்டு வந்தார். சிம்புவின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க தயங்கினார்கள்.

மேலும் உடல் எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளை சந்தித்த சிம்பு அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தற்போது தான் மாநாடு என்ற வெற்றி படத்தை வழங்கினார். இப்படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. அதோபோல் இனி பழைய சிம்புவை பார்க்க முடியாது எனவும் சிம்பு கூறியுள்ளார்.

மேலும் சிம்பு கூறியிருப்பதாவது, “என் மேல் அன்பில் இருந்தவர்கள் நிறைய. நான் அன்பில் இருந்தவர்களும் அதே மடங்கு. நினைவுகளை துரத்திக்கிட்டும் போகவே கூடாது. எல்லாம் மறந்தாச்சுனு சொன்னால் அது பொய். அதிலிருந்து வெகுதூரம் வந்துட்டேன். அதுதான் இமயமலைக்கு போயிட்டு வந்ததும் தொடச்சுவிட்ட மாதிரி ஆகிடுச்சு.

சின்ன சைக்கிள் ஓட்டியிருப்போம். சின்ன டவுசரை போட்டு ஆடியிருப்போம். அதெல்லாம் இப்போ நினைவுகள் தானே. அப்படி போயிடனும். அதுதான் நியாயம். இனி வருகிற துணைக்கு ஆறுதலா, உதவியா, துணையா இருக்கணும். நினைச்ச மாதிரி சின்னதா சண்டை போட்டுக்கலாம். நினைச்ச மாதிரி எந்த ஈகோவும் இல்லாம சேர்ந்துக்கலாம். சிம்பு இனி அப்படித்தான் இருக்கப்போறான்” என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment