அதான் கொரோனா குறைந்துவிட்டதுல; இனி கடற்கரைகளுக்கும் செல்லலாம்! ஒன்றாம் தேதி முதல் அனுமதி…..
இந்த ஆண்டு தொடக்கம் முதலே எதிர்பாரத விதமாக பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக இந்திய அரசால் கட்டுப்படுத்த கொரோனாவின் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கம் முதல் அதிகரிக்க தொடங்கியது.
இதன் விளைவாக ஒவ்வொரு மாநில அரசும் இரவு நேர ஊரடங்கு தங்களது மாநிலத்தில் அமல்படுத்தினார். கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை நெருங்கி இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் பதிவாகிக் கொண்டே வந்தது.
இருப்பினும் ஒரே வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியானது. இதன் விளைவாக தமிழகத்தில் அமல்படுத்தி இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு இரண்டையும் மீண்டும் வாபஸ் பெற்றது நம் தமிழ்நாடு அரசு.
அதோடு மட்டுமில்லாமல் வருகின்ற செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களும் 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இவ்வாறு கொரோனாவின் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் நாளை மறுநாள் முதல் அதாவது ஒன்றாம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் முதல் பொதுமக்கள் அனைவரும் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
