தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்டாலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது
இந்த நிலையில் தற்போது ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ‘மாஸ்டர்’ ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் ஜெட் வேகத்தில் செய்து வருகின்றனர்
அவற்றின் ஒரு பகுதியாக தற்போது தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ‘மாஸ்டர்’ கொண்டாட்டம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் மாலையில் ‘மாஸ்டர்’ குறித்த ஒரு புரமோ வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தினமும் ‘மாஸ்டர்’ படத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பதும் இன்று முதல் ‘மாஸ்டர்’ படம் வெளியாகும் தினம் வரை சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Each day is a #Master celebration! ????
Let’s add to the celebration with new #MasterPromo every evening.
Stay tuned! ????#100MViewsForVaathiComing— XB Film Creators (@XBFilmCreators) January 5, 2021