முழு ஊரடங்கும் கிடையாது! பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையும் கிடையாது!! கெத்து காட்டும் புதுச்சேரி;

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படுவது திருநாளாகவும் தை திங்கள் முதல் நாள் தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும். இது தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் முதன்மையான விழாவாகும். இதற்காக தமிழர்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து பொங்கலிட்டு மகிழ்வர்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படும். ஏனென்றால் புதுச்சேரி மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் தமிழர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இந்த சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்படுமா? என்ற கேள்வி நிலவி இருந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தக்க பதிலை அளித்துள்ளார்.

அதன்படி புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். காணும் பொங்கல் அன்று மட்டும் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் அதாவது முழு ஊரடங்கு கிடையாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்பது அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment