Connect with us

“அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல” – 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்..

Capture 16

செய்திகள்

“அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல” – 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்..

“அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல” – 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 45 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட 7 மாடி கட்டிடத்தை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ட்சி அமைப்பு இந்த சாதனையை நிகழ்ச்சியுள்ளது.

இந்த கட்டிடம் 5 ஆம் தலைமுறை அதிநவீன விமானங்கள் உள்நாட்டு வளர்ச்சிக்கான மையமாக பயன் படுத்தப்பட உள்ளதாக டி.ஆர்.டி.ஒ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கட்டிடத்தை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர். இந்த வித்தியாசமான முயற்ச்சி உலகிலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த கட்டிடம் அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல என தெரிவித்தார்.

இந்த திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு  உத்தேச செலவு  ரூ.15,000 கோடி  ஒதுக்கப்பட்டு 45 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top