எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தால் வாடகை வீடு கிடையாது: தமிழ் நடிகர்

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வாடகை வீடு கிடையாது என தமிழ் துணை நடிகர் ஒருவர் என்று போர்டு மாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக் பாண்டியன் என்பவர் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் முன் போர்டு ஒன்றை எழுதி மாட்டியுள்ளார்.

அதில் வித்தியாசமான நிபந்தனைகளை விதித்துள்ளார். குடிகாரர்கள், வடமாநிலத்தவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு வாடகைக்கு அணுக வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது என்னைப் பொருத்தவரை குடிப்பழக்கம் என்பது இளைஞர்களை கெடுக்கும் ஒரு பழக்கம் என்றும் அதனால் குடிகாரர்களுக்கு வீடு கிடையாது என்று கூறி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் வடமாநிலத்தவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் வட மாநிலத்தவர்களை அதிகம் வேலைக்கு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி மீது தனக்கு கோபம் என்றும் அதனால் வடமாநிலத்தவர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடு வாடகைக்கு கேட்கும்போது நான்கு கால்களில் தவழ்ந்து வருகின்றனர் என்றும் பிறகு என்னையே நீங்கள் யார் என்று கேட்கிறார்கள் என்றும் அந்த அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு வீடு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.