Connect with us

1,2 ஆம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது!!! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு…

education department

செய்திகள்

1,2 ஆம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது!!! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு…

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் வீட்டுப்பாடம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்தத் திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதோடு வீட்டு பாடம் தரவில்லை என்று பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top