தமிழகத்தில் தற்போது மின்வாரியத் துறை அமைச்சராக உள்ளார் செந்தில் பாலாஜி. அவர் அமைச்சர் ஆனதற்கு பின்னர் சட்டப்பேரவையில் ஒவ்வொரு மின்வாரியம் பற்றிய புள்ளி விவரங்களை பட்டியலிட்டு கூறி விளக்கமளித்தார். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் மின்வெட்டு, மின் தடை பற்றியும் பேசினார். அவ்வப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதில் அளித்துக் கொண்டே வருகிறார்
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது இல்லை என்று விளக்கமளித்துள்ளார். அதன்படி கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
புதிதாக ஜிஎஸ்டி வசூலிப்பது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் என்றும் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மின்மாற்றிகளில் நவீன மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதனால் தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் ஜிஎஸ்டி இருக்காது என்பது உறுதியாகி உள்ளது.