Connect with us

முட்டை கோஸ் தவிர வேறு சாப்பாடு இல்லை: வுஹானை மிஞ்சும் கொரோனா பாதிப்பு!!

201710181512286476 reduce body weight SECVPF

செய்திகள்

முட்டை கோஸ் தவிர வேறு சாப்பாடு இல்லை: வுஹானை மிஞ்சும் கொரோனா பாதிப்பு!!

முட்டை கோஸ் தவிர வேறு சாப்பாடு இல்லை: வுஹானை மிஞ்சும் கொரோனா பாதிப்பு!!

சீனாவில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனாவால் உலகம் முழுவதும் படாதப்பாடு பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வந்த தடம் தெரியாமல்  விரட்டி அடித்த நாடு சீனா.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள் கடும் குளிருக்கு இடையே பரிசோதனைகள் செய்துகொள்ளவே நிற்கும் மக்கள் என மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் கடந்து இரண்டு  வருடங்களாக  12,000 பாதிப்புகளை கண்ட ஹாங்காங் கடந்த இரண்டு மாதங்களில் 20,000 பாதிப்புகளை சந்தித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்படையும் மக்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சாப்பிடகூட எதுவும் இன்றி தவிக்கும் பரிதாபநிலை அங்கு ஏற்ப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள், கடைகாரர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதால் உணவுக்கு தின்டாட்டம் நிலை ஹாங்காங் நகரில் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சீனாவில் இருந்து கப்பல் வழியாக கொண்டுவரப்பட்ட முட்டைகோஸ் தான் சமைத்து சாப்பிட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர் ஹாங்காங் மக்கள்.

விரைவில் முட்டை, இறைச்சி போன்றவைகளை அனுப்பி வைக்கப்படும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாங்காங் நகரில் தினமும் 7000 நபர்கள் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top