Connect with us

விஜய்க்கு அபராத வழக்கு… இடைக்காலத்தடை நீட்டிப்பு!!!

1908 vijay thalapathys son shares a heartfelt note on social media as his father completes 29years in the

பொழுதுபோக்கு

விஜய்க்கு அபராத வழக்கு… இடைக்காலத்தடை நீட்டிப்பு!!!

நடிகர் விஜயின் வழக்கு தொடர்பாக இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான வருமான வரித்துறையின் கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது இந்த ஆண்டுக்கான வருமானது 35 கோடி பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் புலி படத்திற்காக பெற்ற ரூ15 கோடியை கணக்கில் காட்டப்படவில்லை என கண்டறியப்பட்டது.

இதனால் வருமானத்தையும் அழைத்ததாக ஒன்றரை கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் மாதம் விஜய்க்கு வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமானவரித்துறையினரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, இது குறித்து பதில் அளிக்குமாறு கூறினார்.

இந்த சூழலில்  வழக்கு விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top