மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு போலீசாருக்கு அம்மாநில
முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிரிபூம் பகுதியில் 8 பேரை எடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன்முறை நிகழ்ந்த பகுதிக்கு சென்ற மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிம் பேசிய மம்தா பானர்ஜி இந்த பயங்கரத்தை அரங்கேற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் போலீசாரிடம் இருந்து எந்தவித சாக்குப்போக்கு கண்டிப்பும் வரக்கூடாது என தெரிவித்தார். இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதற்கு மேல் துணிச்சல் வராத அளவிற்கு இந்த வழக்கை அரசே எடுத்துச்செல்லும் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்றும் கலவர சூழல் ஏற்பட்ட உடன் உடனடியாக மக்களை பாதுகாக்குமாறு அப்பகுதி தலைவருக்கு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.