தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இல்லை: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவு தவறானது என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை!

முன்னதாக, தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள 15 மாதிரிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.