News
சந்தேகம் வேண்டாம், சசிகலாவுக்கு உலகத்தர சிகிச்சை: தலைமை மருத்துவர் பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று உள்ளது என்பதும் கொரோனா தொற்றும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது
அதன் பின்னர் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அவரது வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் சந்தேகம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அனுமதிக்கப்பட்ட பின்னரே கொரோனா பரவி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது சிகிச்சையில் எந்த வித சந்தேகமும் வேண்டாம் என்றும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா என்பவர் தெரிவித்துள்ளார்
விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் அவருக்கு நுரையீரல் தொற்று குறைந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பும் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
