Connect with us

கோவில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்கக்கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!!

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

கோவில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்கக்கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!!

கோவில் வழிபாடுகளில் சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளை பார்க்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அய்யனார் மற்றும் கருப்பு கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனிநிதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து, மதிமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபதி மகாதேவன் மற்றும் சத்திய நாராயணம் முன் அமர்வுக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் கோவில் வழிபாட்டு தளம் என்றும் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது என கூறினர்.

அதே போல் ஒருவரின் சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளை பார்க்க கூடாது எனவும், அனைத்து இனத்தினரும் ஒன்றாக சேர்ந்து விழாவை கொண்டாடுமாறு கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top