சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா? கோவில் நிர்வாகம் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் முருகனின் அறுபடை வீடுகளில் குறிப்பாக திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் திருவிழா மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும் என்பதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூரசம்ஹாரம் விழா வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் 9 ஆம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன்பின் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சூரசம்காரம் நிகழ்வு நடைபெறும் என்றும் அந்த நிகழ்வுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முருகனின் மாற்ற ஆறுபடை வீடுகளிலும் உள்ள கோவில் நிர்வாகங்கள் சூரசம்காரம் நிகழ்வுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment