கொரோனா பாதிப்புமில்லை! சிகிச்சையில் கொரோனா நோயாளிகளும் இல்லை!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் 90க்கும் குறைவாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை, யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு ஒன்றும் பதிவாகவில்லை.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் வாழும் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் மற்றொரு சந்தோசமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள நோயாளிகள் யாரும் இல்லை என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
அதன்படி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் கொரோனா சிகிச்சையில் இல்லை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. புதிதாக கொரோனா ஏதும் பதிவாகாத நிலையில் ஏற்கனவே தொற்று ஏற்பட்ட 14 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
