Connect with us

20 நாட்களாக விலையில் மாற்றம் இல்லை.! இருந்தாலும் புலம்பும் வாகன ஓட்டிகள்!!

பெட்ரோல்

தமிழகம்

20 நாட்களாக விலையில் மாற்றம் இல்லை.! இருந்தாலும் புலம்பும் வாகன ஓட்டிகள்!!

20 நாட்களாக விலையில் மாற்றம் இல்லை.! இருந்தாலும் புலம்பும் வாகன ஓட்டிகள்!!

நம் தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் அதிர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியானது. ஏனென்றால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் என்று உயர்த்தப்பட்டது. அதே விலையில் சமையல் எரிவாயு விலை மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.

இதற்கு எதிராக தமிழகமெங்கும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையில் சராசரியாக 76 காசுகள் என்ற நிலையில் தினம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

இந்த விலையானது கடந்த 20 நாட்களாக உயரவில்லை. இதனால் விலையில் மாற்றம் ஏதுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 20 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.94க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தாலும் கூட இந்த விலையானது அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top