11 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!

e3887974eb79c3af2d2d4b567bebdecc

கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி, ரூ.110ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதேபோல் டீசல் விலையும் கிட்டத்தட்ட ரூபாய் 100ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் இருந்த நிலையில் இன்றும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து சென்னையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.49 என்ற நிலையிலும் டீசல் விலை ரூ.94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதை அடுத்தே இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment