தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்டு வந்தது.
இதனிடையே தொடர்ந்து 25வது நாளாக இன்றைய தினத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து 25- வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.