Connect with us

9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Tamil Nadu

9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

753e3c71fec565e76058ce6ada935e36

கடந்த சில வருடங்களில் தேர்தல் நடைபெறும் போது மட்டுமே வாரக்கணக்கில் மாதக்கணக்கில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருக்கும். ஆனால் தற்போது இந்தியாவில் எந்த தேர்தலும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் 9 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் ஒரே விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த 9 நாட்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தற்போது பெட்ரோல் ரூபாய் ரூ.102.49 என்ற விலைக்கும் டீசல் ரூபாய் 94.39 என்ற விலைக்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை உண்மையில் குறைந்து இருக்க வேண்டும் ஆனால் அதன் பயனை பொதுமக்களுக்கு தராமல் எண்ணெய் நிறுவனங்கள் அதே விலையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top