
தமிழகம்
என்னது இன்றும் விலையில் மாற்றம் இல்லையா? புலம்பும் வாகன ஓட்டிகள்!
நம் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த விலை உயர்வு கடந்த இருபத்தி மூன்று நாட்களாக நிகழவில்லை என்று கூறலாம். இதற்கு முன்னதாக தினசரி பெட்ரோல், டீசல் விலை 76 காசுகள் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்றையே விலையிலேயே பெட்ரோல் டீசல் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி சென்னையில் கடந்த இருபத்தி மூன்று நாட்களாக விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110.84க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே வேளையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.95 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையில் மாற்றம் இல்லை என்றாலும் கூட பெட்ரோல் டீசல் விலை என்னமோ சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் தினம்தோறும் வாகன ஓட்டிகள் புலம்பிக்கொண்டே உள்ளனர்.
