ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்திற்கு டாட்டா காட்டிய அஜித்?.. துபாய்க்கு குடும்பத்துடன் டூர்!..

விடாமுயற்சி படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுக்க ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் அஜர்பைஜானில் படமாக்க நடிகர் அஜித் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னைக்கு திரும்பி இருந்தார் அஜித். இனிமேல் சென்னையில் தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு காரணமாக தத்தளித்து வந்தது.

மீண்டும் வெளிநாடு பறந்த அஜித்:

அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களுக்கான போக்குவரத்து உதவிகளை நடிகர் அஜித் செய்ததாக விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார். மேலும், அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் உடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானது.

கலைஞர் 100 விழாவுக்காகத்தான் அஜித் சென்னை திரும்பி உள்ளார் என்றும் கூறப்பட்டன. மேலும், அதெல்லாம் இல்லை அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள நிலையில் அவரது திருமணம் வரும் டிசம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் சென்னைக்கு அஜித் வந்துள்ளார் என்றும் கூறினர்.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்

ஆனால், திடீரென நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் துபாய்க்கு கிளம்பி சென்று விட்டதாகவும் ஒரு வாரம் கழித்து அஜர்பைஜானில் ஆரம்பமாகும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித் குமார் துபாயில் புதிதாக சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருப்பதாகவும் தொடர்ந்து அங்கேயே தங்கி வருவதாகவும் தற்போதும் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சில நாட்கள் அங்கே தங்கி விட்டு அதன் பின்னர் அஜர்பைஜானில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் கூறுகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், பிரியா பவானி சங்கர், ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் வில்லன்களாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விடாமுயற்சி படத்தின் டைட்டிலை தவிர்த்து இதுவரை வேறு எந்தவொரு அப்டேட்டும் அதிகாரப்ப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.