தமிழக கோயில்களின் செல்போன் பயன்படுத்த தடை என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
கோயிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது ஆங்காங்கே செல்போன் மணி ஒலிப்பதால் பக்தர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றும் இதனால் இந்த தடை உத்தரவு மிகவும் பயனுள்ளது என்றும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.