இன்று இரவும் இந்த 6 மாவட்டங்களில் பஸ்கள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்தது.

இந்தநிலையில் இன்று இரவும் 6 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்க இருப்பதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இரவு பேருந்துகள் ஓடாது என்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டமாக நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் அத்தியாவசிய தேவை என்று பயணங்களை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்று இரவுக்குள் பேருந்துகளில் சென்று விடுமாறும் இன்று இரவு முதல் நாளை காலை வரை பேருந்துகள் ஓடாது என்பதால் பொதுமக்கள் தங்களுடைய பயணத்திட்டத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.