Entertainment
கோயம்பேடு – ஓட்டுப்போட ஊர் செல்ல பஸ்கள் இல்லாததால் மக்கள் அவதி
இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாக தமிழகத்தில் அனல் பறக்கும் வாக்குப்பதிவுகள் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 6மணி வரை நடக்கிறது.

மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா நடக்கிறது என்பதால் இரவு எட்டு மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் ஓட்டுப்பதிவுக்காக சென்னையில் வேலை செய்யும் மேற்குமண்டல மாவட்ட மக்கள், தென் மண்டல மாவட்ட மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து குவிந்தனர்.
இருப்பினும் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் கூட்டமும் நெரிசலுமாய் திணறியது கோயம்பேடு.
போதிய பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் சென்னையின் புறநகர்ப்பகுதியான பெருங்களத்தூரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பஸ்கள் வரவில்லையென மக்கள் மறியல் செய்தனர்.
