அரபிக் குத்து இல்ல.. அட்டர் காப்பி குத்து.. என்ன அனிருத் இதெல்லாம் ?

தேனீகள் எப்போதும் பலவிதமான பூக்களில் இருந்து தேனை திருடி தனது கூட்டில் சேர்த்து வைப்பது போல உள்ளூர் இசை வாசிகள் முதல் உலக இசைவாசிகள் வரை பாரபட்சமில்லாமல் ரசித்து அதை இன்ஸ்பிரேஷனாக  புதிய பாடல்களை இயற்றுவதில் கில்லாடி இசையமைப்பாளர் தான் அனிருத்.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலை அரபிக் குத்து ஸ்டைலில் அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கொடுத்த பில்டப்புக்கு காணாது அனிருத் அந்தப் பாடலுக்கு போட்ட முன்னோட்ட இசையை காப்பி பேஸ்ட் வித்தை என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணி தீ மிதிக்க போகும் போது தேவா அமைந்த பின்னணி இசைதான் பீஸ்ட் படத்தின் அரபி குத்துக்கான வெஸ்டன் டைப் ரீமிக் வெர்சன் என்று ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்றொருவர் யுவன் இசையில் மாரி 2 படத்தில் வரும் ரவுடி கட்ட பாடலில் ஆரம்பக்கட்ட பீட் போல் இருக்கிறது இந்த பீஸ்ட்டின் அரபிக் குத்து ரோஸ்ட் செய்துள்ளார்.

இது எல்லாத்தையும் தாண்டி அறிமுக பாடலுக்கு இவர்கள் ஏன் அரபிக் குத்து என பெயர்வைத்திருக்கிறார்கள் என்பதையும் இது ஒரு அப்பட்டமான காப்பிகுத்து என்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் இசை ரசிகர்கள்.

கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ரீமெக்ஸ் பாடல் இணையத்தில் வெளியாகி பட்டைய கிளப்பிய தீவானா ஹீம் தீவானா பாடலை போல அனிருத் இசைஅமைத்தது அம்பலமானதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment