Connect with us

திங்கட்கிழமை விடுமுறை அறிவித்த 987 பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை.!!

school closed2

தமிழகம்

திங்கட்கிழமை விடுமுறை அறிவித்த 987 பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை.!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. மேலும் கலவரக்காரர்கள் பள்ளியின் வளாகத்தை அடித்து நொறுக்கினர்.

அங்குள்ள பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் உயர்நீதிமன்ற நீதிபதி அடுத்த நாளே பல்வேறு விதமான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

மேலும் அன்று இரவு தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக திங்கட்கிழமை தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இதனால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை இல்லை என்று கூறியுள்ளது.

987 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. பதினெட்டாம் தேதி விடுப்பு ஈடு செய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம் என்று விளக்கம் ஏற்புடையதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top